OpenAI

21 அக்டோபர், 2026

தயாரிப்பு

1 லட்சத்துக்கும் மேற்பட்ட விளம்பரதாரர்கள்; மேலும் 26 நாடுகளில் ChatGPT விளம்பரங்கள்

ChatGPT‑இல் எதை வாங்குவது என மக்கள் ஆராய்ந்து, ஒப்பிட்டு முடிவெடுக்கும்போது, உள்ளூர் வணிகங்கள் முதல் உலகளாவிய வணிக முத்திரைகள் வரை மேலும் பல விளம்பரதாரர்கள் இப்போது அவர்களைச் சென்றடையலாம்.

ஒவ்வொரு வாரமும் 120 கோடிக்கும் அதிகமானோர் யோசனைகளை ஆராயவும், தெரிவுகளை ஒப்பிடவும், முடிவெடுக்கவும் ChatGPT‑ஐப் பயன்படுத்துகின்றனர். மக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளையும் சேவைகளையும் கண்டறிய விளம்பரங்கள் உதவும். விளம்பரங்கள் இல்லையெனில் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லாத தெரிவுகளும் இதில் அடங்கும்.

விளம்பரங்களை அறிமுகப்படுத்தி எட்டு மாதங்களுக்குச் சற்று மேலாகியுள்ள நிலையில், ChatGPT‑இல் விளம்பரப் பிரச்சாரங்களை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விளம்பரதாரர்கள் நடத்தியுள்ளனர். இன்று, ChatGPT விளம்பரங்களை மேலும் 26 நாடுகளுக்கு விரிவுபடுத்துகிறோம். இதன் மூலம் உலகளவில் 89 நாடுகளில் இவை கிடைக்கும். அண்மையில் ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா, தைவான் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட விரிவாக்கங்களின் தொடர்ச்சியாக இது அறிமுகமாகிறது.

உலகெங்கிலும் உள்ள மக்கள், ChatGPT‑ஐ இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் அணுக விளம்பரங்கள் உதவுகின்றன. ஆர்டிஃபிஷியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ் மனிதகுலம் முழுவதற்கும் பயனளிப்பதை உறுதிசெய்வதே எங்கள் நோக்கம் ஆகும். Free மற்றும் Go திட்டங்களில் மட்டுமே விளம்பரங்கள் தோன்றும். Plus, Pro மற்றும் Enterprise சந்தாக்கள் தொடர்ந்து விளம்பரமின்றி இருக்கும்.

உலகெங்கிலும் மேலும் பல வணிகங்களுக்கு ஆதரவு

மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா, பெரு உள்ளிட்ட மேலும் 14 லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ChatGPT விளம்பரங்களைக் கொண்டுவருகிறோம். நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, செர்பியா, உக்ரைன், கம்போடியா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் மேலும் பல சந்தைகளிலும் அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த நாடுகளில் தொழில்நுட்பக் கூட்டாளர்கள் மூலமாகவோ, விளம்பர மேலாளர்⁠(புதிய சாளரத்தில் திறக்கும்) வழியாகச் சுயசேவை முறையிலோ ChatGPT விளம்பரங்களை விளம்பரதாரர்கள் அணுகலாம்.

மக்கள் தங்களுக்கான தெரிவுகளை ஆராயும்போதே அவர்களைச் சென்றடையுங்கள்

ChatGPT‑இல் மக்கள் தாங்கள் தேடுவதை விளக்கலாம், தொடர் கேள்விகளைக் கேட்கலாம், உரையாடல் மூலம் தங்களுக்குப் பொருத்தமான தெரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். தனது முதல் மாரத்தான் ஓட்டத்திற்குப் பயிற்சி பெறும் ஒருவர், பந்தயம் நடைபெறும் வாரத்திற்கான உணவு யோசனைகளை முதலில் ஆராயலாம். பிறகு, தனது உணவு விருப்பங்களுக்கும் சமைக்கக் கிடைக்கும் நேரத்திற்கும் ஏற்பத் தெரிவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். அந்த உரையாடலுக்குப் பொருத்தமான ஒரு விளம்பரம், அவர் இதுவரை கருத்தில் கொள்ளாத மளிகைப் பொருட்கள் விநியோகச் சேவையை அறிமுகப்படுத்தலாம்.

மக்கள் தங்களுக்கான தெரிவுகளை மதிப்பிட்டு, எது பொருத்தமானது என முடிவெடுக்கும் இந்தத் தருணங்களில், வணிகங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த ChatGPT விளம்பரங்கள் வழிவகுக்கின்றன. உள்ளூர் வணிகங்கள், பிராந்திய வணிக முத்திரைகள், பன்னாட்டு நிறுவனங்கள் என அனைத்துக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கிறது.

“L’Oreal-இல், ‘புதிய வாய்ப்புகளைத் தொடக்கத்திலேயே பயன்படுத்திக்கொள்வது’ எங்கள் பண்பாடு ஆகும். இன்று, அழகு சார்ந்தவற்றைக் கண்டறியவும் ஆராயவும் செயற்கை நுண்ணறிவு மாடல்களைப் பல நூறு கோடி நுகர்வோர் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு அர்த்தமுள்ள பயன்களை வழங்குவதும் ஆழமான உறவுகளை உருவாக்குவதுமே எங்கள் பணியின் மையமாகத் தொடர்கின்றன. OpenAI உடன் தொடக்கத்திலேயே சோதனைகளை மேற்கொள்வதால், கண்டறிதல், மதிப்பீடு செய்தல், செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்கள் வழியிலான வணிகம் எனப் பல கட்டங்களிலும் பயனுள்ள அனுபவங்களை முன்னோடியாக உருவாக்க முடிகிறது. அழகு குறித்த உரையாடல்கள் எங்கு நடந்தாலும், மிகவும் நம்பகமான, நிபுணத்துவம் வாய்ந்த தீர்வாக L’Oréal திகழ்வதை இது உறுதிசெய்கிறது.”
அஸ்மிதா துபே, L’Oréal குழுமத்தின் தலைமை எண்ணிம மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி

எங்கள் விளம்பரக் கொள்கைகளின் வழிகாட்டுதலில்

ChatGPT மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாப்பதே எங்கள் விளம்பர அணுகுமுறையின் அடித்தளம் ஆகும்.

OpenAI-இன் விளம்பரக் கொள்கைகளின் வழிகாட்டுதலின்படி, உரையாடல்களை விளம்பரதாரர்களுடன் பகிராமல் தனிப்பட்டவையாக வைத்திருக்கிறோம். வாடிக்கையாளர் தரவையும் விற்பதில்லை. ChatGPT‑இல் விளம்பரங்கள் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டு, அதன் பதில்களிலிருந்து தனியாகக் காட்டப்படும். ChatGPT வழங்கும் பதில்களில் விளம்பரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தாது.

மக்கள் தங்கள் இலக்குகளை நோக்கிச் செயல்பட்டு முடிவெடுக்கும்போது அவர்களுக்கு விளம்பரங்கள் பயனுள்ளதாக இருப்பதும், எங்களிடம் விளம்பரம் செய்யும் வணிகங்களுக்குப் பலனளிப்பதுமே எங்கள் இலக்கு ஆகும்.

அடுத்து என்ன

எங்கள் கொள்கைகளில் உறுதியாக இருந்தபடியே, செயற்கை நுண்ணறிவுக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்.

ChatGPT விளம்பரங்கள் இப்போது 89 நாடுகளில் கிடைக்கின்றன. எங்கள் அடுத்தகட்ட வளர்ச்சியில் கூடுதல் விளம்பர வடிவங்கள், நோக்கங்கள், விளம்பரம் வாங்குவதற்கான தெரிவுகள் மற்றும் அளவீட்டுத் திறன்களை உருவாக்குவது இடம்பெறும். ChatGPT‑இன் இயல்பான அனுபவத்தோடு ஒன்றிணையும் வகையில், நுகர்வோருடன் வணிகங்கள் தொடர்புகொள்வதற்கான புதிய வழிகளையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்.

தங்கள் தேவைகளை ஆராயவும், தெரிவுகளை மதிப்பிடவும், முடிவெடுக்கவும் மேலும் பலர் ChatGPT‑ஐ நாடுகின்றனர். இதன் மூலம், அவர்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் கண்டறிய உதவுவதோடு, சிறியவை முதல் பெரியவை வரை அனைத்து வணிகங்களும் வளர்ந்து செழிக்க உதவும் வாய்ப்பையும் காண்கிறோம்.

ChatGPT‑இல் விளம்பரம் செய்ய ஆர்வமுள்ள வணிகங்கள் ads.openai.com⁠(புதிய சாளரத்தில் திறக்கும்) தளத்தில் மேலும் அறியலாம்.

ஆசிரியர்/எழுத்தாளர்

OpenAI